சொகுசு அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு மத்திய லண்டன் பகுதியில் பஞ்சமில்லை. தனியான மதுபான அறை, அருகில் உள்ள ஹெஸ்டன் ப்ளுமேந்தால் உணவகத்திற்கு செல்வதற்கான சுரங்கப்பாதை ஆகியவற்றுடன் அமைந்துள்ளது இந்த சொகுசுக் குடியிருப்பு. பாதுகாப்பு காரணங்கள் கருதி திருடர்கள் வரும் போது திடிரென பயத்தை உண்டாக்கும் அறைகளும் இந்த வீட்டில் உண்டு.ஆனால் இது போன்ற அறைகளினால் சில நேரம் ஆபத்தும் ஏற்படுவதுண்டு என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.பிரித்தானியாவில் வீடுகளின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் இந்த சொகுசு அடுக்கு மாடிக் குடியிருப்பு 140 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது கண்டு மலைத்துப் போயுள்ளனர் ரியல் எஸ்டேட் தொழில் முகவர்கள்.
தற்போது உலகத்திலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட அடுக்கு மாடி சொகுசு குடியிருப்பு என்ற தகுதியை இந்த வீடு பெற்றுள்ளதாக கூறுகின்றனர். ஒரு சதுர அடி 6000 பவுண்டுகளுக்கும் மேல் விலை போயுள்ளது. இதுவரை மொத்தமாக அந்த பகுதியில் விற்கப்பட்டுள்ள குடியிருப்புக்கள் 870 மில்லியன் பவுண்டுகளைத் தாண்டியுள்ளது. சொகுசுக் குடியிருப்புக்களுக்கான முத்திரைத்தாள் செலவுகள் 4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் மத்திய லண்டன் பகுதியில் தற்போது விற்கப்பட்டுள்ள இந்த சொகுசுக் குடியிருப்புக்கு 5.6 மில்லியன் பவுண்டுகள் முத்திரைத்தாள் செலவாகும்.
No comments:
Post a Comment