Thursday, August 12, 2010
அன்னை தெரேசா
அன்னை தெரேசா (அல்லது அன்னை தெரசா) (எக்னஸ் கோஞ்செ பொயாஜியூ, Agnes Gonxha Bojaxhiu ஆகஸ்ட் 26, 1910 – செப்டம்பர் 5, 1997) இந்தியாவில் கருணை இல்லம் (Missionaries of Charity) என்ற கிறிஸ்தவ சமூகசேவை அமைப்பை தோற்றுவித்த அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார். கொல்கத்தாவின் வறிய மக்களிடையே அவர் செய்த நற்பணிகள் உலக பிரசித்தமாக்கியது. இவரது மரணத்தின் பின்னர் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் ஆசிர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.
பெற்ற விருதுகள்
* 1962 – சமாதானம் மற்றும் உலக புரிந்துணர்வுக்கான மக்சேசே விருது வழங்கப்பட்டது.
* 1972 – பாப்பரசர் 23ஆம் அருளப்பர் சமாதான பரிசும் கபிரியேல் விருதும் வழங்கப்பட்டது.
* 1973 – டெம்லெடொன் விருது
* 1979 – அமைதிக்கான நோபல் பரிசு
* 1980 – இந்திய அரசின் பாரத ரத்னா பட்டம் வழங்கப்பட்டது.
* 1981 – எய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் லெஜென் டி ஒணர் (Legion d’Honneur) என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.
* 1985 – அமெரிக்காவின் அதியுயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம் வழங்கப்பட்டது.
* 1996 – கௌரவ அமெரிக்க குடிமகள் தகமை வழங்கப்பட்டது.
* 1997 – அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும் உயிருடன் இருந்தபோதே இந்திய தபால் தலையில் உருவம் பதிக்கபப்ட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.
Labels:
Great Personalities
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment