
நிலவில் தண்ணீர் இருக்கலாம். நிலவின் உட் பகுதியில் அது பனிக்கட்டியாக உறைந்திருக்கலாம் என்றெல்லாம் சமீபகாலமாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் கோளியல் பிரிவின் பேராசியர் காரி ஷார்ப் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியுள்ள ஆய்வு இந்த நம்பிக்கையை முழுவதுமாக சிதைத்துள்ளது. நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறைகளில் உள்ள குளோரினின் அளவை ஆய்வு செய்த இந்தக் குழுவினர் அங்கு தண்ணீர் இருக்கவே வாய்ப்பில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.
No comments:
Post a Comment