மைக்ரோ சொஃப்ட்(Microsoft) நிறுவனத்தினால் கடந்த வருடம் ஜூன் மாதம் பின்ங் தேடுபொறியானது (bing) அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஒருவருடம் நிறைவடைந்திருக்கும் நேரத்தில் ,அது சிறந்த ஒரு சந்தைப் பங்கினை பெற்றுள்ளது. இது யாஹூ (yahoo) நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும்
com...score எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பின்ங்(bing) தேடுபொறி 12.7% சந்தைப் பங்கினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலும் கூகிள் தேடுபொறியானது 62.6% எனும் சந்தைப் பங்கினைக்கொண்டு முதலிடத்தில் இருப்பதோடு யாஹூ தேடுபொறியானது 18.9% ஐ கொண்டுள்ளது.
மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் மகாநாட்டில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் பின்ங் தேடுபொறிக்கு சிறந்த ஒரு வரவேற்பு ஆரம்பத்திலேயே கிடைத்துள்ளதாகவும் மைக்ரோ சொஃப்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment