WELCOME.........

MY POSTS...சரல் என்ற புதிய செயற்கை கோள் 2011-ல் ஏவப்படும்,வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி,ஆறுமுக நாவலர்,நடை - நோய்க்கு தடை!,பருவகால மாற்றங்களும் உலகமயமாதலும்,அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!,டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ( R. P. Sethu Pillai ),செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்,நிலவில் தண்ணீ?ர் இருப்பதற்கு வாய்ப்பில்லை,கைராசியானவர்,தமிழ் கடி ஜோக்ஸ்,எந்திரனை விற்க முயன்ற தந்திரன்!,Cricket,Murali: The man who reinvented spin ,Oldest signs of tool-making foundHominin skulls,Cricket,தேசிய பாதுகாப்பு தினம் : இம்முறை யாழில்,கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்' ,தமிழும் சமயமும்,Jokes & Funny Pictures-Funny Doctor & patient Discussion,அன்னை தெரேசா,தொமஸ் அல்வா எடிசன்,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,குட்டன்பேர்க்,பெஞ்சமின் பிராங்கிளின்,மார்க்கோனி,சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் வாழ்பவர்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்,2590 கோடி ரூபாவுக்கு விற்கப்பட்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு

Thursday, August 12, 2010

எந்திரனை விற்க முயன்ற தந்திரன்!

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா திரைப்படமான எந்திரன் தெலுங்கு உரிமையை போலிப் பத்திரம் மூலம் விற்க முயன்ற இயக்குநர் ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் அலுவலகத்தில் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தவர் உதயகுமார். இவரும் திருப்பதி திருமலா பிலிம்ஸ் அலுவலக ஊழியர் சுரேந்திரன் என்பவரும் போலியாக சில ஆவணங்களைத் தயாரித்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.27 கோடிக்கு எந்திரன் தெலுங்கு உரிமையை விற்றுவிட்டதாக அந்தப் பத்திரங்களில் பக்காவாக எழுதியிருந்தனர். இந்தப் பத்திரத்தின் நகல்களை வைத்துக் கொண்டு இருவரும் ஆந்திராவில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களையும் தொடர்பு கொண்டு ரோபோ படத்தை திரையிட பேரம் பேசியுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களும் இவர்களை நம்பி அட்வான்ஸாக ரூ.2 கோடி வரை கொடுத்துள்ளனர். இந்த விவரங்கள் எல்லாம் தெரிய வந்ததும், உடனடியாக சன் பிக்ஸர்ஸ் நிறுவன சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா சென்னை போலீஸில் உதயகுமார் மீது புகார் பதிவு செய்தார். பின்னர் ரோபோ உரிமை யாருக்கும் விற்கப்படவில்லை என்று அறிவித்துவிட்டார். உடனடியாக ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் உதயகுமார் கைது செய்யப்பட்டார். திருப்பதி திருமலா பிக்சர்ஸ் ஊழியர் மீதும் ஹைதராபாத் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரியன் சுட்டெரிக்கும்னு தெரிஞ்சே போனா என்ன செய்றது?

No comments:

Post a Comment