திருநெல்வேலியில் தோன்றிய ரா.பி. சேதுப்பிள்ளை, பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றவர். செந்தமிழ் நலங்கனிந்த சொற்பொழிவாற்றுவதிலும் உரை நடைபெழுதுவதிலும் ஒப்பற்ற ஆர்வமும் திறமையும் உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். "திருவள்ளுவர் நூல்நயம்", "தமிழகம் ஊரும் பேரும்", "தமிழின்பம்" போன்ற இவர்தம் நூல்கள் இனிமைமிக்க செந்தமிழ் உரைநடைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும். இவர் தம் தமிழ்த் தொண்டைப் பாராட்டி இவருக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் "டாக்டர்" பட்டம் சூட்டியது.
தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்.
- ரா.பி. சேதுப்பிள்ளையின் (தமிழின்பம்).

No comments:
Post a Comment