கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் தங்களுக்கு நியமனம் வழங்க கோரி பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் ஒரு கவணயீர்ப்பு பேரணி ஒன்றினை நடாத்தியது.
இந்த பேரணியானது கல்லடியில் உள்ள பேச்சி அம்மன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி கல்லடி பாலம் ஊடாக சென்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடத்தில் மேற்படி சங்கத்தின் தலைவர் திரு கே.ஜெயராஜீ அவர்களால் பட்டதாரிகளின் கோரிக்கைகள் உள்ளடங்கிய ஒரு மகஜர் கையளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் மேற்படி மகஜரை உரிய முறைப்படி ஜனாதிபதி கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் உரிய அமைச்சுக்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மட் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா பா.அரியநேத்திரன் சீ.யோகேஸ்வரன் அகியோரும் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான துரைரெட்ணம் என்பவரும் உடன் இருந்தனர்.
மிகவும் அமைதியாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டமானது கல்லடி பாலத்தினூடாக சென்றபோது வாகன போக்கு வரத்திற்கு தடை ஏற்பட்டது இதனால் சுமார் முப்பது நிமிடங்களுக்கு மேலாக பாலத்தினூடாக எந்த வாகனங்களும் செல்லமுடியாதவாறு இருந்தது அப்போது தலத்திற்கு விரைந்து வந்த பெருமளவான காவல்துறையினராலும் உயரதிகாரிகளாலும் பாதை தடையை சீர்செய்யமுடியாமல் இருந்தது.
அத்துடன் மாவட்ட செயலகத்திற்குள் ஆட்பாட்டக்காரர்கள் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை அப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட் காவல்துறை அத்தியட்சகருடன் பேசியதால் அவர்களின் பிரதிநிதிகள் சார்பாக ஐந்து பேருக்கு மாத்திரமே உட்செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.






No comments:
Post a Comment