
புதுடில்லி: நவம்பர் 15ம் தேதிக்குள் கதிரியக்கம் பரவுவதை தடுக்கும் கருவிகளை பொருத்தி, அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்காத மொபைல் போன் கோபுரங்களின் உரிமையாளர்கள், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து லோக்சபாவில் மத்திய தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் சச்சின் பைலட் கூறியதாவது: மொபைல் போன் கோபுரங்கள் மூலம் கதிரியக்கம் பரவுவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை இருந்து வருகிறது. இது மிகவும் கவலையளிக்கக் கூடியது. உலக சுகாதார ஆய்வு மையமும் எச்சரிக்கை செய்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து ஆலோசிக்கப்படுகிறது. மொபைல் போன் கோபுரங்களில் கதிரியக்கம் பரவுவதை தடுக்கும் வகையிலான உரிய கருவிகள் பொருத்த வேண்டும். வரும் நவ., 15ம் தேதிக்குள் இந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாத மொபைல் போன் கோபுரங்களின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.
No comments:
Post a Comment